Powered By Blogger

புதன், 8 ஜூன், 2016

பூ - இரண்டு

"சினிமா வா.. ?" சட்டென  நான்  பிளான் போட்டேன். நான்  வீட்டில்  போரடித்துப் போய்தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். நானும் இவளுடன்   போனால் என்ன  ?

"ம்ம்.. !!" இயல்பாக கேட்டாள் "வரீங்களா?"

இதற்காகத்தானே நான்  காத்துக் கொண்டிருக்கிறேன்.
"வொய் நாட்..? பட்.. யார் யாரு.. ?"

"எங்க பிரெண்ட்ஸ்.. எல்லாரும்..!" அவள்  சொல்ல...

 என் தங்கை அவசரமாகக்  குறுக்கிட்டாள்.
"யேய்.. பேசாம வாடி.. அவன போய் கூப்டுட்டு இருக்க.. ?"

"எல்லாமே  கேர்ள்ஸா.. ?" நான்  கேட்க

"ஆமா.. எல்லாருமே கேர்ள்ஸ்தான்.. நீ வேண்டாம்..!" என் தங்கை  லேசான  படபடப்புடன் சொன்னாள்.

ஆனால்  பாணு  சிரித்தாள். என்னை பார்த்துக் கொண்டு தலையை மட்டும்  ஆட்டி..
' இல்லை  '  என ஜாடை செய்தாள்.

 ஆனால்  என் தங்கை  அவளை பேச விடாமல் பிடித்து இழுத்து கொண்டு  ஓடினாள்.

 பின்னால் திரும்பி பார்த்து சிரித்து டாடா காட்டினாள்  பாணு.

நான்  ஏக்கமாக அவளையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்புறம் ஆழமாக ஒரு  பெருமூச்சு விட்டேன்.


கால் மணி நேரம் கழித்து  பாணு  எனக்கு  போன் செய்தாள். 

"ஹாய்  பாணு... "

"ஹாய்  பிரள்.. !ஸாரிப்பா.. சுஜா சொன்னது பொய்.. கேர்ள்ஸ் பாய்ஸ் எல்லாம்  கலந்து தான் வராங்க.. இன்னிக்கு எங்க பிரெண்டு ஒருத்தனோட பர்த்டே.. ஸோ.. எல்லாரையும் மூவி கூட்டிட்டு  போறான.. ! நீங்க  வந்தா.. அவளுக்கு  டிஸ்டர்ப்பா இருக்கும்னுதான்... ஸோ.. ஸாரி... !!"

"இட்ஸ் ஓகே பாணு.. என்ஜாய் பண்ணுங்க.. "

"தேங்க்ஸ்.. "

"பாணு... "

"ம்ம்.. சொல்லுங்க.. ?"

" ஐ மிஸ் யூ.. " நான்  பட்டென சொல்ல...

அவள் ஒரு  இரண்டு  நிமிடம்  கழித்து சொன்னாள். 
" மீ டூ... !!"

- வரும்..... !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக